பாலாவின் கையில் ‘அவன் இவன்’ ஆக குட்டுப்பட்டு, கஷ்டப்பட்டு ‘நானும் நடிகன் தான்’ என்று காட்டிய விஷால், இப்போ ‘நானும் மாஸ் ஹீரோ தான்’ன்னு படம் பாக்க வந்த நம்பள போட்டு காட்டு காட்டுன்னு பொறட்டி போடுறாரு வெடில (புரட்சி தளபதின்னு டைட்டில் வேற).. சண்டைக்கோழி வெற்றிக்கு காரணமே மாஸ் இல்லாத நம்பள்ள ஒருத்தன், மாஸ் ஹீரோ ஆகறது தான்... ஆனா அந்த வெற்றி மெதப்புல நாம இன்னும் மாஸ் ஹீரோன்னு நெனச்சிட்டு த-மாஸு பண்ணிட்டு இருக்காரு விஷால்… வராத மாஸ வா வான்னா எப்படி சார் வரும்? அமுதனின் ’தமிழ்படம்’ காட்டிலும் இந்த படம் SPOOF MOVIEல சிறப்பா பண்ணிருக்காங்க…
அதரப்பழசு ’எவன் வந்தாலும் அடிப்பேன் ஹீரோ’ கூட ‘எதையும் காட்டும் ஹீரோயின்’ சேர்த்து ‘இவனைப்போல அண்ணன்’ செண்டிமெண்ட் கலந்து ’வெட்டுங்கடா அவன’ன்னு படம் பாக்க வந்தவங்கள ‘கிழிங்கடா ஸ்க்ரீன’ன்னு கொல்றாங்க… விஷால் பாக்க மேன்லியா இருக்காரு… (சமீராவும் அவர விட மேன்லியா இருக்காங்க – அது வேற விஷயம்) எப்பவுமே தனது மசாலா படங்கள்ல விஜய்ய இமிடேட் பண்ணும் பாடி-லாங்குவேஜ் இப்படத்தில் மிஸ்ஸிங் என்பது பெரிய ஆறுதல்… கேரக்டருக்கு எது தேவையோ அத நல்லா பண்ணிருக்காரு… மத்தபடி சொல்றதுக்கு எதுவும் இல்ல… படத்துல பாடல்கள் நல்லா எடுத்துருக்காங்க, பின்னணி இசை சில இடங்களில் பளிச்… ஒரு சீன் வந்தாலும் ஊர்வசி விவேக்கை காட்டிலும் சிரிப்பு வரவழைக்குறாங்க… விவேக் சார் – இன்னும் எத்தன படத்துல தான் இதே டெம்ப்ளேட்?
ரீமேக் பண்ண வேற நல்ல படமே கிடைக்கலையா? திரைக்கதையில் பிரபுதேவா சில பட்டி டிங்கரிங் செய்திருந்தாலும், எதுவுமே ஒட்டவே இல்லை… டெலுங்கு படத்த தமிழ்ல எடுப்பாங்க, இவங்க டெலுங்கு படத்த எடுத்து டெலுங்கு படமாவே கொடுத்துருக்காங்க… விஷால் ரொம்ப கொடுத்து வச்சவர்.. ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க’ போன்ற குடும்பம்… இவர்கள் இருக்கும் வரை விஷால் மேலும் நமக்கு மசாலா வெடிகளை கொடுத்து, தமிழ் சினிமாவை சிறப்புற செய்வார்…
வெடி – செம கடி
படத்துல பெருசா எதுவும் இல்ல… அதுனால விமர்சனமும் பெருசா இல்ல..
வருகைக்கு நன்றி!!

1 பேர் திருப்பி லொள்ளு, நக்கல் பண்ணிட்டாங்க:
Yeniku peruku munadi vishal puratchi thalapathy pattam potaro, aniku pudicha sani, innum avara aatikondu irukirathu :D :D
Post a Comment